மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 மார்ச், 2026

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் நடந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி சிறிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழாவானது 01.03.2026 ம் கொடியேறி நடைபெற்று வந்தது.  

மேலும் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல்துறை சார்பாக 
கண்காணிப்பு கோபுரங்கள்
மூன்றடுக்கு கடற்கரை பாதுகாப்பு
முதலுதவி ஏற்பாடுகள் பக்தர்களுக்கு வழிகாட்ட பேனர்கள் அமைப்பு பாதுகாப்பு எண்கள் டிரம்பில் வைக்கப்பட்ட கடல்நீர்,
தற்காலிக பேருந்து நிறுத்தம் செய்யும் இடங்கள் பார்க்கிங் வசதிகள் காவல் கட்டுப்பாட்டு அறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் மண்டைக்காடு திருவிழா கூட்ட நெரிசலில் காணாமல் போன குழந்தை மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்கள், மணிபர்ஸ் ஆகியவற்றை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். 

மேலும் பக்தர்கள் எந்த இடையூறு இன்றி தரிசனம் செய்யும் வகையில் போக்குவரத்து வசதிகள் மற்றும் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களில் பாதுகாப்பை உறுதி செய்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad