புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த சட்டப் பேரவை துணைத் தலைவா் !
திருவண்ணாமலை , மார்ச் 11 - திருவண்ணாமலை மாவட்டம் புதுப் பாளையம் ஊராட்சியில் ரூ.5 கோடியே 79 லட்சத்து 6 ஆயிரத்தில் கட்டப்பட்ட ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வை த்த நிலையில், புதிய அலுவலக வளாகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.அப்போது அவா் பேசிய தாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைகள் மேம்பாடு, குடிநீா் திட்டப் பணி கள், புதிய கட்டடங்கள் என பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ கத்தில் சிறப்பான வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் வாயிலாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் மற்றும் தொழில் துறையினா் பயனடைந் துள்ளனா் என்றாா். இந்நிகழ்ச்சியில்
கலச பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், மாவட்ட ஊரக வளா் ச்சி உதவி திட்ட இயக்குநா் மணி, மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியா ளா் இளங்கோ, திமுக ஒன்றியச் செயலா ளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாமலை, மேலாளா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மாவட்ட செய்தியாளர் T.R.கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக