வேலூர் மண்டல தேர்தல் நிதியளிப்பு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 மார்ச், 2026

வேலூர் மண்டல தேர்தல் நிதியளிப்பு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்பு !

வேலூர் மண்டல தேர்தல் நிதியளிப்பு  விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்பு !
திருப்பத்தூர் , மார்ச் 2 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக வேலூர் மண்டல தேர்தல் நிதியளிப்பு விழா மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக நிறுவன பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்இந்நிலையில் வைகோவிற்கு மதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்த னர்.திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டை
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி தர்ம புரி,உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த மாவட்ட, நகர,ஒன்றிய, பொறுப்பாளர்கள் சார்பில் சுமார் 40-லட்ச ரூபாயை தேர்தல் நிதியாக நிறுவன பொதுச் செயலாளர் வைகோவிடம் கொடுத்தனர். பின்னர் வைகோ பேசுகையில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான தனது அரசியல் நிலைப்பாட்டை நினைவு கூர்ந்து பேசி னார். பிரதமர் பதவியேற்பு விழா வில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித் ததையும், அதனைத் தொடர்ந்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தியதையும் குறிப்பிட்டார். பதவிப்பிரமாண நிகழ்ச்சி யில் ராஜபக்சேவை வரவேற்றதை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் காரணமாக எங்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் என தெரிவித்தார். இலங்கைத் தமிழர் உரிமைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தாம் தொடர் ந்து குரல் கொடுத்து வருவதாகவும், அதற்காக எந்தத் தியாகத்திற்கும் தயார் எனவும் வைகோ கூறினார். இதில் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad