பாளையங்கோட்டையில் சவேரியார் கல்லூரி மேலாண்மை நிறுவனம் (XIBA), இடைக்கல்லூரி போட்டிகள் சிபேட் – 2026” (XIBATE 2026). - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 மார்ச், 2026

பாளையங்கோட்டையில் சவேரியார் கல்லூரி மேலாண்மை நிறுவனம் (XIBA), இடைக்கல்லூரி போட்டிகள் சிபேட் – 2026” (XIBATE 2026).

பாளையங்கோட்டையில் சவேரியார் கல்லூரி மேலாண்மை நிறுவனம் (XIBA), இடைக்கல்லூரி போட்டிகள் சிபேட் – 2026” (XIBATE 2026) சிறப்பாக நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புனித சவேரியார் கல்லூரி மேலாண்மை நிறுவனம் ( XIBA)வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த – இடைக்கல்லூரி போட்டிகள் சிபேட் – 2026 சிறப்பாக நடைபெற்றது.” 

நிகழ்ச்சிக்கு தூய சவேரியார் குழுமத்தின் தலைவர் முனைவர் இன்னாசிமுத்து சே.ச. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வர்ஷா பேப்பர்ஸ் திருநெல்வேலி, நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீநிதி சொக்கலிங்கம் கலந்து கொண்டு மாணவர்களின் மேலாண்மைத் திறன், தலைமைத்துவம் மற்றும் தொழில்முனைவுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் தந்தை முனைவர் மைக்கேல் ஜான் சே.ச. வரவேற்புரை ஆற்றினார். நிர்வாகத் தந்தை முனைவர் பீட்டர் சேவியர் சே.ச. மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களாக பேராசிரியர்கள் சகாய சாபு, முனைவர் ராம்குமார் மற்றும் முனைவர் கிறிஸ்டினா ஜெயநித்திலா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் நான்கு பிரிவுகளில்
அணி நிகழ்வுகள் ,முக்கிய நிகழ்வுகள், 
கலை நிகழ்வுகள் என மொத்தம் பதினோரு போட்டிகள் நடைபெற்றன.
திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளில் 500 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

போட்டிகளில் லேடி டோக் கல்லூரி, மதுரை மாணவர்கள் முதல் இடத்தைப் பெற்று பரிசுக்கோப்பயை தட்டி சென்றனர். அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.
மேலும், சிறந்த மேலாளர் விருதை லேடி டோக் கல்லூரி மாணவி ஹர்ஷினி பெற்றார். 

நிகழ்வின் இறுதியில்
சவேரியார் கல்லூரி மேலாண்மை நிறுவன இயக்குனர் தந்தை முனைவர் மைக்கேல் ஜான் சே.ச விழாவின் நிறைவில், முதல் பரிசு கோப்பை மற்றும் இரண்டாம் பரிசு கோப்பை பெற்ற அணிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

நிர்வாகத் தந்தை முனைவர் பீட்டர் சேவியர் நிரை உரையாற்றி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் இனை உபயத்தார் திருநெல்வேலி மீனாட்சி ஹோண்டா நிறுவனத்தின் தலைவர் டால்டன் இதர பரிசுகளை வழங்கினர். 

இவ்விடைக்கல்லூரி போட்டி முக்கிய உபயத்தார் வர்ஷா பேப்பர்ஸ் மற்றும் இனை உபயத்தார்கள் நெல்லை மோட்டார்ஸ் _ TVS மற்றும் திருநெல்வேலி மீனாட்சி ஹோண்டா என 47 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியின் உபயத்தார்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad