நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 மார்ச், 2026

நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா!!

நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா!!
நெமிலி, மார்ச் 1 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் பேரூர் தி.மு.க சார்பில், நெமிலி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு அவர்கள் முன்னிலை வகித்தார். நெமிலி பேரூர் கழக செயலா ளர் ஜனார்த்தனன் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் இளைஞர்களுக்கு வாலிபால் கிட், கிரிக்கெட் கிட், கேரம் போர்டு, செஸ் போர்டு உள்ளிட்ட விளை யாட்டு உபகரணங்கள், பெண்கள் பிரிவில் கபாடி விளையாட்டிற்கான பேக் மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அமைச்சசர் அவர்கள் வழங்கினார்.
 இதனைத்தொடர்ந்து அருகே உள்ள கலா பேரடைஸ் திருமண மண்டபத்தில் ஆயிரம் நபர்களுக்கு அசைவ உணவு வழங்கினர். இதில் நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், அவைத்தலைவர் புருஷோத் தமன், ஒன்றிய துணை செயலாளர் முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், சேகர், கோபி, கிளை கழக, வட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad