நாவல்காடு அருகே கான்கிரீட் வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி - ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா என போலீஸ் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 மார்ச், 2026

நாவல்காடு அருகே கான்கிரீட் வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி - ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா என போலீஸ் விசாரணை.

நாவல்காடு அருகே கான்கிரீட் வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளி பலி - ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா என போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளந்தியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 31) என்ற கூலித்தொழிலாளி, நாவல்காடு பகுதியில் கான்கிரீட் பணியை முடித்துவிட்டு சக தொழிலாளர்களுடன் 407 சரக்கு வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். 

அப்போது வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற தொழிலாளர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூதப்பாண்டி காவல் துறையினர், உயிரிழந்த சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும், வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பலமான வாகன விதிமீறல்கள்:
இந்த விபத்தில் சிக்கிய 407 வாகனத்தின் (எண்: TN 69 X 2039) ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வாகனத்திற்கு முறையான தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate), காப்பீடு (Insurance) மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லை என்பதும், வாகனத்திற்கான வரி (Tax) செலுத்தப்படாமல் காலாவதியாகி இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad