கட்டுமான தொழிலாளர்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 மார்ச், 2026

கட்டுமான தொழிலாளர்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்

உழைக்கும் கரங்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் தீர்மானம்

நெல்லை மார்ச் 8- கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையை ஐம்பதாயிரமாக ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என உழைக்கும் கரங்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு உழைக்கும் கரங்கள் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் பாளையில் இன்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சின்னத்துரை தலைமை வகித்தார். 

நெல்லை மாவட்ட பொறுப்பு பொறுப்பாளர் முருகன் வரவேற்றார். மாநில பொருளாளர் மல்லிகா ஆண்டறிக்கை வாசித்தார். மாநில துணை செயலாளர் மாசான முத்து துணைத்தலைவர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் ஜஸ்டின் ஞானராஜ், 

நெல்லை மாவட்ட பொறுப்பாளர்கள் ஆறுமுக குமார், அலெக்ஸ் ஜெயக்குமார், மகேஷ், மணி, பவுன்ராஜ், கோயில் அம்மாள், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஆபேல், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் குத்தாலிங்கம், மானூர் ஒன்றிய பொறுப்பாளர் பிச்சமுத்து, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ரூ. இருபதாயிரம் திருமண உதவித் தொகையை ஐம்பதாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணம் போல் கட்டுமான தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். 

புதுச்சேரி அரசில் வழங்குவது போல் தமிழ்நாடு நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுரேஷ் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad