தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் பிச்சிவிளை வடக்கு தெருவில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தகோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிந்து கடந்த 6ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடந்த வந்தன. ஞாயிற்றுக்கிழமை 10.30 மணிக்கு மேல் 12மணிக்குள் பத்திரகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை,தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழா கமிட்டியினர், ஊர்மக்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக