ரூ. 2 கோடியே பத்து லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 மார்ச், 2026

ரூ. 2 கோடியே பத்து லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது.

ரூ. 2 கோடியே பத்து லட்சம் மோசடி 
நகை மதிப்பீட்டாளர் கைது

நாகர்கோவில் வடசேரியில் உள்ள பிரதான வங்கியின் தலைமை கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றியவர் ரகுவரன் (36). இவர் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வங்கியில் இருந்த நகைகளை தணிக்கை குழுவினர் சோதனை செய்தனர். 

சோதனையில் போலி நகைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது. 

இதுகுறித்த மேலாளர் புகாரின் பேரில் வடசேரி போலீசார் ரகுவரனை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad