10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது.
விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள்:
காலை 6:மணி முதல் இரவு 10: மணி வரை அனைத்து மதம் சார்ந்த விழாக்கள்; அரசியல் கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள் அல்லது தனியார் இல்ல விழாக்களில் நிர்ணயிக்கப்பட்ட 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது.
குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட எஸ்பி ஸ்டாலின் Feedback Centre 7708239100 மற்றும் 8122223319 என்ற Whatsapp எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக