ஸ்ரீவைகுண்டம்.10. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் 6 வது திருப்பதி ஆன தொலைவில் லிமங்கலம் (இரட்டை திருப்பதி யில்) இன்று சாத்து முறை நடந்தது.
மார்கழி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது தொலைவில் லிமங்கலம் கோவிலில் பழங்கால முறைப்படி ஸ்ரீரங்கத்திலிருந்து நம்மாழ்வார் எழுந்தருளி சாத்துமுறை நடைபெறுவது வழக்கம்.
கால மாற்றத்தின் காரணமாக நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் எழுந்தருளாளதால் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நம்மாழ்வார் உற்சவம் முடிந்த மறுநாள் தொலைவில் லிமங்கலம் எழுந்தருளி சாத்துமுறை நடைபெறுகிறது.
காலை 5 மணிக்கு நம்மாழ்வார் விஸ்வரூபம். நித்தியல் கோஷ்டி. 7 மணிக்கு புறப்பட்டு அப்பன் கோவில் விடையாற்று. 7.50 மணிக்கு புறப்பட்டு தொலைவில் லிமங்கலம் விடையாற்று. 8.15 மணிக்கு புறப்பட்டு இரட்டை திருப்பதி வந்தடைந்தார்.
மாலை 4 மணிக்கு மண்டபத்திற்கு முன் கட்டிலில் சிறப்பு திருமஞ்சனம். பின்னர் நம்மாழ்வார் தேவர்பிரான் உடன் மண்டபத்தில் எழுந்தருளி இருவருக்கும் தீபாராதனை. நெய்வேத்யம் முடிந்தவுடன் 5.30 மணிக்கு மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எம்பெருமானார் ஜீயர். அரையர் சம்பத்து. திருவாய்மொழிபிள்ளை திருமாளிகை. கற்குளம்திருமாளிகை. ஆத்தான் மேல. கீழ. வடக்கு திருமாளிகை அண்ணாவியார் ஸ்வாமிகள் சேவித்தனர்.
நம்மாழ்வார் முன்னிலயில் தேவர்பிரான் சாத்து முறை நடந்தது. 6.45 மணிக்கு தீர்த்தம். சடாரி. சாத்துமுறை துளசி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நம்மாழ்வார் விடை பெற்று ஆழ்வார்திருநகரி வந்தடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன். பாலாஜி. ரகு. சுந்தர்ராஜன். எம்பெருமானார் ஜீயர்.ராமானுஜம் ஸ்வாமிகள் ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர். சந்தானம். வாசு. கஸ்தூரி ரங்கன். நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக