நாகர்கோவில் இந்து கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கொட்டாரத்தில் நடைபெற்றது.
இதில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் தென்குமரி கல்வி கழகச் செயலாளர் பி.டி.செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதில், இந்து கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் மலர், முனைவர் மகேஷ், கொட்டாரம் அரசுப்பள்ளி ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் வை.கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியின் போது வாக்களிப்பது நமது உரிமை நமது கடமை எனவும், வாக்களிப்போம் ஜனநாயகம் காப்போம் எனவும் மாணவ, மாணவிகள் கோஷமிட்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக