இரணியல் அருகே நடந்த விபத்தில் முதியவர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 மார்ச், 2026

இரணியல் அருகே நடந்த விபத்தில் முதியவர் பலி.

இரணியல் அருகே நடந்த விபத்தில் முதியவர் பலி.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குருந்தன்கோடு அடுத்த காரோடு ‌பகுதியை சேர்ந்தவர் பிரான்சீஸ் (71). நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து ஊருக்கு வந்த மகளை அழைத்து செல்ல அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் வந்தார். 

சாலையின் எதிர்ப்புறம் மகள் நிற்பது கண்டு சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த பைக் பிரான்சீஸ் மீது வேகமாக மோதியது. 

படுகாயம் அடைந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad