மார்ச்.11- தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் அத்திமரப்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவகுமார், கோரம்பள்ளம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாஸ்டின் வினு,
மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மற்றும் ஜீவன் ஜேக்கப் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, விவசாயிகள் சங்க தலைவர் என்.வி.பூபதி, துணை தலைவர் திருமால், ஆட்சி மண்டல உறுப்பினர் தானியேல்,
ஆலோசனை குழு உறுப்பினர்கள் தவசிவேல், அழகுராஜ், சிவனைந்த பெருமாள், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை மற்றும் கிருஷ்ண கோபால் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக