ஆழ்வார்திருநகரி கோவிலில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 மார்ச், 2026

ஆழ்வார்திருநகரி கோவிலில் கருடசேவை.

ஆழ்வார்திருநகரி கோவிலில் கருடசேவை . 

ஸ்ரீவைகுண்டம் மார்ச் 28 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று கருடசேவை நடந்தது. கடந்த 23 ந்தேதி பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது . 

காலை 5.30 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு நித்தியல். 8.30 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் மாடவீதி ரதவீதி சுற்றி வந்தார் . வாகன குறட்டில் 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். அலங்காரம் . தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நடந்தது. 

12.30 மணிக்கு சாத்துமுறை சேவித்தனர் . தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை. 6.15 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ்வார் வாகனகுறட்டிற்கு எழுந்தருளினார. 

 பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு 7.55 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் மாடவீதி. ரதவீதி சுற்றி வந்தார். 

தினசரி மாலை 6.30 மணிக்கு யானை. சந்திரபிரபை. குதிரை . பல்லக்கு. வெட்டிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது .மார்ச் 31 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் விவேக். சுவாதி. எம்பெருமானார் ஜீயர். திருக்குறுங்குடி பேரருளாள இராமானுஜ ஜீயர்.நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad