கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான ஆசாரிப்பள்ளம் அடுத்த மேலப்பெரு விளை பகுதியில் அமைந்துள்ள 332 ஆண்டுகள் பழமையான புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் இன்று காலை முதலே திரளான பக்தர்கள் கூடியிருந்தனர்.
அவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி ஆலயத்தை சுற்றிவந்து பக்திப் பாடல்கள் பாடினர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் குடும்ப நலன், சமூக ஒற்றுமை மற்றும் நாட்டின் அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக