சிலிண்டர் தட்டுப் பாடு பக்தர்களுக்கு சாமி பிரசாதம் லட்டு வழங்கும் பணிகள் மீண்டும் தொடக்கம் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்ற வாரம் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில், நேற்று இந்து சமய அறநிலை யத்துறையின் உத்தரவின்படி, கோயில் வளாகத்தில் இலவச லட்டு பிரசாதம் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற் கொண்டு, விறகு அடுப்பு மூலமாக லட்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடை பெற்று, காலை முதல் மீண்டும் பக்தர் களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப் பட்டு வருகிறது. அதேபோல் பிரசாத விற்பனை நிலையத்தில் புளி சாதம் மற்றும் சர்க்கரை பொங்கல் மட்டுமே பக்தர்களுக்கு விற்பனை செய்யப் படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டசெய்தியாளர்
-T.R. கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக