கன்னியாகுமரி கடற்கரையில் ஆலிவ்ரிட்லி கடல் ஆமை குஞ்சுகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 மார்ச், 2026

கன்னியாகுமரி கடற்கரையில் ஆலிவ்ரிட்லி கடல் ஆமை குஞ்சுகள்.

கன்னியாகுமரி கடற்கரையில் ஆலிவ்ரிட்லி கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.

ஜனவரி முதல் மார்ச் வரை கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆலிவ்ரிட்லி கடல் ஆமைகள் இடைத்த 6,504 முட்டைகளை வனத்துறையினர் பாதுகாப்பு கூடங்களில் சேகரித்து பாதுகாத்தனர்.

அதில் இருந்து பொறித்த 1,448 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. கடலுக்கு சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கடற்கரை பகுதிகளில் ஆமை முட்டைகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரி அன்பு தலைமையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad