நெல்லை, திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 மார்ச், 2026

நெல்லை, திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா.

நெல்லை, திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா.

07.03.2026 (சனிக்கிழமை) நெல்லை, திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா கதீட்ரல் காலனி, "பைம்பொழில் கு.பாலசுப்பிரமணியன் நினைவு நூலகம்" அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இறை வணக்கப்பாடலுடன் விழா இனிதே தொடங்கியது.

மன்றத்தின் நிறுவனர்/தலைவர்,
நூலகத்தின் அமைப்பாளர், பா.ஹரிஹர கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.   

விழா தலைவர், ம.தி.தா. இந்துக்கல்லூரி, முதல்வர், முனைவர் கு. பாலசுப்பிரமணியன், மாணாக்கர்கள் கல்வியில் சிறந்து தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, தலைமையுரையாற்றினார்.

விழாவின் சிறப்பு அழைப்பாளர், ம.தி.தா. இந்துக்கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் பா. ஆதிவராகமூர்த்தி, மன்றத்தின் நற்செயல்களை பாராட்டி, கல்வியின் பயனை எடுத்துரைத்து, கல்வி உதவித் தொகையினை மாணாக்கர்களுக்கு வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.

மன்றத்தின், துணைச் செயலாளர், சீர்மிகு.கைலாஷ் கட்டளை,
மதிதா பள்ளி - தலைமையாசிரியர் மு.சோமசுந்தரம், அறிவியல் பட்டதாரி ஆசிரியை கு. சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழா நிறைவாக, மன்றத்தின், செயலாளர், ரா. சிவக்குமார் நன்றியுரையாற்றினார்.  

மன்றத்தின், துணைத் தலைவர், பா.வேலாயுதம், பொருளாளர், சீ.கோபி, செயற்குழு உறுப்பினர்கள், கோ.சீத்தாராமன், நெல்லை கோமான், பழனிக்குமார், பேச்சிமுத்து, கவிதா, மோனிக்கா, மதிதா பள்ளி ஆசிரியர், இரா.மார்கண்டன், ஆசிரியை சு.மாரியம்மாள், செந்தில் ஸ்டூடியோ, செந்தில், முருகேசன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்வுகளை, பாளை, லொயோலா காண்வென்ட் தொடக்கப்பள்ளி, மாணவி ஹரி.சம்யுக்தா சீதா தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad