திருப்பூர் வடக்கு திமுக பகுதி இளைஞரணி அமைப்பாளர் அதிமுகவில் சேர்ந்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 மார்ச், 2026

திருப்பூர் வடக்கு திமுக பகுதி இளைஞரணி அமைப்பாளர் அதிமுகவில் சேர்ந்தார்


மாநகர் மாவட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி கோல்டன் நகர் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் K.M.பிரபாகரன் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்,திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர்

முனைவர் 

பொள்ளாச்சி.V.ஜெயராமன் அவர்களின் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார்

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் ஒன்றிய கழக செயலாளருமான K.N. விஜயகுமார் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்வில்  மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்

அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad