ஈரோடு மொடக்குறிச்சி கணபதிபாளையத்தில் யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக உலக மகளிர் தின விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 மார்ச், 2026

ஈரோடு மொடக்குறிச்சி கணபதிபாளையத்தில் யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக உலக மகளிர் தின விழா



     ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதிபாளையத்தில் உலக மகளிர் தின விழாவினை முன்னிட்டு யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக பெண் ஆளுமைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது



    கணபதிபாளையத்தில் மருத்துவர் கோ.தமயந்தி அவர்களின் இல்லத்தில் யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் பெண் ஆளுமைகள் 

தலைவர் ர.மோனிஷா, பொதுச் செயலாளர் பூ.பிரவீணா மற்றும் செயற்குழு உறுப்பினர் மு.மாலினி அனைவருக்கும் அடையாள அட்டையியை 

சிறப்பு விருந்தினர் மருத்துவர் கோ.தமயந்தி (ஓய்வு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை)

அவர்கள் வழங்கினார்கள்...


  அறக்கட்டளையின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பெண் ஆளுமைகள் கலந்து ஆலோசனை செய்தார்கள்...

நிகழ்ச்சியினை அறக்கட்டளையின் நிறுவனர் புன்னகை தூரன் இரா.சங்கர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்...


   அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பூ.பிரவீணா பெண் ஆளுமை அவர்களின் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது அறக்கட்டளையின் பெண் ஆளுமைகள் மற்றும் சிறப்பு விருந்தினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad