தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு கூட்டத் தில் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரி யர் கோரிக்கை !
வேலூர் , மார்ச் 3 -
வேலூர் மாவட்டம் வேலூரில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக 2026 சட்டமன்ற தேர்தலில் அறிக் கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இதில் ஓய்வுபெற்ற தொ ழிற்கல்விஆசிரியர்செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் கிராமபுற பள்ளிகளிலும் தொடர்ந்து நடைபெற தேர்தல் அறிக்கை இடம்பெற கோரி மனு அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது.1978-79ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து மேல் நிலைப்பள்ளிகளிலும் மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு 11 மற்றும் 12ஆம் வகுப்பில் நடைமுறையில் இருந்த பாடங்கள் தொழிற்கல்வி ஆசிரி யர்கள் பணியிடம் காலியேற்பட்டால் அவை நிரப்ப படாமல் அப்பளியில் தொ ழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதால் மெல்ல கற்கும் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பினை மறுக்கும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு முறைக்கு மேல் தோல்வி அடைந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொதுப்பாட பிரிவுகளிலே அறிவியல் பிரிவிலோ அல்லது கலை பிரிவிலோ சேர்க்கப்படுவதில்லை இதனால் இந்த மாணவர்கள் உயர் கல்வி பெற இயலாத சூழல் ஏற்படுகின்றது மேலும் பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர வேண்டும் என்று சொன்னால் அவர் கள் வெகு தொலைவுக்கு சென்று கல்வி பெறவேண்டிய தேவை ஏற்படுகிறது எனவே மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு தொழி ற்கல்விப் பாடத்தையாவது கட்டாய பாட மாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண் டும் மேலும் மூன்று முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 128 ஆசிரியர்கள் அனை வருக்கும் தொழிற்கல்வி ஆசிரியராக பணி வரன்முறை செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்
மேலும் காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கத் தின் சார்பில் இரத்த பரிசோதனை மையம், சிறுநீரக டயலிசிஸ் மையம், அமைக்க உதவிட வேண்டுமென மனு அளித்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக