காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி மருத்துவமனை சார்பில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணி !
குடியாத்தம் ,மார்ச் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் உள்ள அத்தி மருத்துவமனை யின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீர வியல் நிபுணர் டாக்டர் பெ சௌந்தர ராஜன் அவர்கள் ஆரோக்கியமாக வாழ உடல் உறுப்பை பாதுகாக்க வேண்டும் என்றும் அதிலும் முக்கியமானது சிறு நீரகம் அதனால் தண்ணீர் அதிகம் குடித் தும் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதும் முக்கி யம் என பொது மக்களுக்கு தெரிவித்துக் கொண்டார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட வேலூர் K V R மருத்து வமனையின் இயக்குநர் சிறுநீரகவியல் மாற்று நிபுணர் டாக்டர் வெங்கட்ரமணன் அவர்கள் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி தலை மை வகித்தார். இதில் அத்தி மருத்துவ மையின் நிர்வாக அதிகாரி சரவணன் , குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே குமரவேல், அத்தி செவிலி யர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை மற்றும் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி ஆகியோர்கள் முன்னிலை வகித்த
னர் மேலும் மருத்துவர்கள், செவிலியர் கள் மற்றும் உடனிருந்தனர். பேரணியில் அத்தி கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 150 பேர் பங்கேற்று பொது மக்களு க்கு சிறுநீரகம் பாதுகாப்பு பற்றிய கோஷ ங்கள் மற்றும் பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குடியாத் தம் நகர காவல் துறை உதவி ஆய்வாளர் தாரணி அவர்கள் பேரணிக்கு பாதுகாப்பு வழங்கினார்.அத்தி கல்வி குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் சௌ . சுகநாதன் அவர்கள் பேரணியை ஒருங்கிணைத் தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக