குடியாத்தம் பரதராமி வார சந்தை ஏலம் கூச்சல் குழப்பத்துடன் ஒத்தி வைப்பு!
குடியாத்தம் , மார்ச் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வார . சந்தையில் சுங்கம் வசூல் செய்ய 2026 .2027 க்கான சுங்கம் வசூல் செய்ய இன்று வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில்பொது ஏலம் நடத்தப்பட்டது இதில் ஏலம் கேட்க நூற்று க்கு மேற்பட்ட வர்கள். கலந்து கொண்ட னர் இதில் 15 நபர்கள் மட்டுமே ஏலம் கேட்க வைப்புத் தொகை செலுத்தினார் கள் இந்நிலையில் ஒன்றிய துணைத் தலைவர் அருன்முரளி. ஏலம் நடத்தப்படு வது சம்பந்தமாக. ஒன்றிய துணைத் . தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலை வர் கோ முறையான தகவல் தெரிவிக்கப் படவில்லை என்று வெளிநடப்பு செய்த னர் இதனால் ஏலம் கூச்சல் குழப்பத்து டன் ஒத்திவைக்கப்பட்டது இதில் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காவல்துறையினர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக