தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் தெப்பம் .
ஸ்ரீவைகுண்டம் மார்ச் 8. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி தெப்போற்ச விழாவின் 10 நாள் ஆன நேற்று தெப்பம் நடைபெற்றது.
காலை 5 மணிக்கு விஸ்வரூபம் 7 மணிக்கு நித்தியல் 8 மணிக்கு மாடவீதி புறப்பாடு. 20 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். நாலாயிர திவ்வியப் பிரபந்தம். கோஷ்டி. சாத்துமுறை. தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. உற்சவர் பொலிந்து நின்றபிரான் தோளுக்கினியானில் அலங்காரம் செய்யப்பட்டு 7 மணிக்கு தெப்பக்குளம் எழுந்தருளினார். 7.45 மணிக்கு தெப்பம் சுற்றி வந்தது. இன்றும் தெப்பம் நடைபெறுகிறது.
ராமானுஜன். கூரத்தாழ்வார். பிள்ளைலோகாச்சாரியார். தேசிகர் போன்ற ஆச்சாரியார் கருடன் நம்மாழ்வார் தெப்பம் நடைபெற்றது. நாளை தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன். பாலாஜி. எம்பெருமானார் ஜீயர். நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக