மார்ச்-19 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, பள்ளி மாணவ, மாணவிகளின் உடற்திறன் மற்றும் விளையாட்டுத் திறமைகளை இளம் வயதிலேயே கண்டறிந்து,
அவர்களை ஒலிம்பிக் போட்டிகள் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் திறமையாக உருவாக்க தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பாக ‘விளையும் பயிர் விளையாட்டு போட்டிகள்’ திட்டம் முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி
தலைமையிலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் ஒருங்கிணைப்பிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக 60 மீட்டர் ஓட்டம், 600 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல் மற்றும் தொடரோட்டம் ஆகிய போட்டிகள் 11,12,13 வயது பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
அதில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவ, மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக ஆழ்வார் திருநகரி மற்றும் திருச்செந்தூர் வட்டாரங்களில் உள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கான விளையும் பயிர் விளையாட்டு போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி சார்பில் மர்காஷிஸ் கல்லூரி மைதானத்தில் வைத்து நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். அந்த போட்டியில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் வட்டார கல்வி அலுவலர் பாப் கயஸ் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.
வெற்றி பெற்றவர்கள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றுள்னர். போட்டிக்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும்
தலைமையாசிரியர் குணசிலராஜ் ஆகியோர் தலைமையில் உடற்கல்வி இயக்குநர் ஜெபசிங் கால்டுவெல், உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித் செல்வசுந்தர், தனபால் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக