ஒன்றிய அரசின் நலத்திட்ட செயல்பாடு கள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் !
திருப்பத்தூர் , மார்ச் 4 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புமற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் DISHA திருவ ண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பின ரும் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான சி.என்.அண்ணாதுரை தலைமையில் ஒன்றிய அரசின் திட்டங் கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசும் மாநில அரசும் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயனாளிகளுக்கும் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டது இக்குழு கூட்டம்.மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல் படுத்தப்பட்டு வருகின்ற ஜல்ஜீவன் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா போஜனா , பெண் குழந்தைகளை காப் போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம், போசான் 2.0 , பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பணிகள் செயல்பாடுகள் குறித்தும் பணி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற் கொண்டு மேலும் தாமதமாக நடைபெறும் பணிகளை விரைவாக நடைபெறுவதற் கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்தக் குழுவின் முக்கிய பணியாகிய மத்திய அரசாங்கத்தின் நிதி எந்தெந்த துறைக்கு சென்றுள்ளது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படை யில் அனைத்து துறை வளர்ச்சி பணி திட்டங்களின் நிதி செலவினங்கள் வெளிப்பாடுகள் மற்றும் குறைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் நடைபெற்று வருகி ன்ற வளச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை மற்றும் சமூக நலத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண் ணாதுரை பங்கேற்று நலத்திட்ட உதவி களை வழங்கினார். சமூக நலத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மை யார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 40 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 37 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 9 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு ரூபாய் 11 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் தலா எட்டு கிராம் தங்க நாணயம், 15 மாற்றுத்திறனாளி களுக்கு இரண்டு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கைபேசிகள், ஐந்து செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 17,500 மதிப் பீட்டில் கருவிகள் மற்றும் ஐந்து மாற்றுத் திறனாளிகளுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரி பொருத்தப் பட்ட சக்கர நாற்காலி என மொத்தமாக 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 56 லட்சத்து 66 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்,திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக