திருப்பத்தூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்ட மைப்பினர்!
200க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைப்பு
திருப்பத்தூர் , மார்ச் 4 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழகம் முழு வதும் உள்ள வருவாய் துறை பணியாளர் களின் பல்வேறு கோரிக்கைகளை திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற் றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தார்.இதனையெடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளில் வருவாய்துறையினர் பல கட்டங்களாக வருவாய் துறை பணியாளர் களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் திமுக அரசு எந்தவொரு போராட்டங்களுக்கும் செவி சாய்க்காமல் வருவாய் துறையினரை புறக்கணித்து வந்ததால் கடந்த 9 நாட் களாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் அலுவலகம் செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ண கிரி செல்லும் மெயின் ரோட்டில் 200க்கும் மேற்ப்பட்டோர் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.அப்போது காவல் துறையி னர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டதோடு தொடர்ந்து 9நாட்களாக வருவாய் துறை பணியாளர்கள் அலுவலகம் செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக