வாணியம்பாடியில் நேற்று இரவு திடீர் என்று பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் வாங்க குவிந்த பொது மக்கள் !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்று வதந்தி பரவியதால் திடீரென பொதுமக்கள் கூட்ட கூட்டமாக பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர்.அங்கு நீண்ட வரிசையில் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், தண்ணீர் பாட்டில்கள், காலி சூட் கேஸ் கேன்களில் வரிசையில் நின்று பெட்ரோல் மற்றும் டீசல் களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.
இதனால் சுமார் இரண்டு மணி நேரத்தி ற்கு மேலாக பெட்ரோல் பங்குகளில் கூட்டம் கூட்டமாக பெட்ரோல், டீசல் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர் பெட் ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் தட்டுப் பாடு என்ற வந்த வதந்தியினால் வாணி யம்பாடி சுற்றிலும் மிக பரபரப்பானசூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர் வமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் வழக்கம் போல் பெட்ரோல் பங்குகளில் கூட்ட மின்றி இயங்கி வருகிறது.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக