டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 மார்ச், 2026

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம்  மனு !
வேலூர் , மார்ச் 2 -
   வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதி வேலூர் மாநகராட்சியின் 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட 3, 4 வார்டு பகுதியில் கல்புதூர், பள்ளிக்குப்பம் செல்லும் வழியில் குடியிருப்புகளுக்கு நடுவே டாஸ்மாக் கடை இயங்கி வருகி றது மது பிரியார்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து குடிப்பதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துக்கள் நடக்கிறது. 
இதனை டாஸ்மாக் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. மது குடிக்க வருபவர்கள் வீட்டு கதவை தட்டி மது குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள். இதனால் பெண்கள் சுதந்திரமாக வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் அளித்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad