திருப்பத்தூரில் திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 மார்ச், 2026

திருப்பத்தூரில் திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் !

திருப்பத்தூரில் திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் !
திருப்பத்தூர்  மார்ச்.18 -
 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பாக மாற்றுத் திறனாளிகளை அவமதித்து பேசியதாக குற்றம்சாட்டி திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ் ணமூர்த்தியை கைது செய்ய கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 03.03.2026 அன்று நடைபெற்ற திமுக மேடையில் பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி, மாற்றுத்திறனாளிகளை கொச் சைப்படுத்தும் விதமாக தகாத வார்த்தை களை பயன்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டினர். இதனால் அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடி க்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலை ந்து சென்றனர். சாலை மறியல் காரண மாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற் கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
 
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad