தாராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ சார்பில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 மார்ச், 2026

தாராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ சார்பில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜின்னா மைதானம் பகுதியில் அமைந்துள்ள மதரஸா மண்டபத்தில், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மாபெரும் இப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.


மாலை சுமார் 6.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொகுதி தலைவர் அபுதாஹீர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு இப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


மேலும் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சிகளான திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரமலான் நோன்பு திறந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் ரம்ஜான் நோன்பு கஞ்சி குளிர்பானம் மற்றும் வடை சமோசா வழங்கப்பட்டது. ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad