நாசரேத்தில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஏப்ரல், 2026

நாசரேத்தில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நாசரேத்தில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 இல் அனைத்து வாக்காளர்களும் 100% வாக்களிக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், திரவியபுரம் பகுதியில் ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில், நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் முன்னிலையில், இன்று 04.04.2026 வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அத்துடன் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா எனும் வாசகம் அடங்கிய பதாகை ஏந்தி புகைப்படம்  எடுத்துக் கொண்டனர். 

மேலும் நாசரேத் பகுதியில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் செல்பி பாயிண்ட் மூலம் புகைப்படம் எடுத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad