புனித வெள்ளியை முன்னிட்டு ஆலந்தலையில் மரித்த இயேசுவின் திருஉடல் பவனி திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் ஆயிரகணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஏப்ரல், 2026

புனித வெள்ளியை முன்னிட்டு ஆலந்தலையில் மரித்த இயேசுவின் திருஉடல் பவனி திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் ஆயிரகணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

புனித வெள்ளியை முன்னிட்டு  ஆலந்தலையில் மரித்த இயேசுவின்  திருஉடல் பவனி திருத்தல அதிபர்  சில்வெஸ்டர் தலைமையில் ஆயிரகணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

தூத்துக்குடி மறை மாவட்டம் மேதகு ஆயர் டாக்டர் ஸ்டீபன் அந்தோணி  வழிகாட்டுதலின்படி திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை  

இயேசுவின் திரு இருதய  அற்புத கெபி திருத்தலத்தில் புனித வெள்ளியையொட்டி திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் சிலுவை ஆராதனை திருப்பலி நடைபெற்றது. 

இதில் இயேசுவின் சிலுவைப் பாடுகள் குறித்து சிறப்பு மறையுரை வழங்கினர். பின்னர் மரித்த இயேசுவின் திருஉடல் பவனி ஆலயத்தின் பின் புரத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக பவனியா  சிறப்பு பிரார்த்தனையுடன் கொண்டு வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. 

இதில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான  கிறிஸ்தவர்கள்  கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர்  சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை டைட்டஸ் மற்றும் திருத்தல நிதி குழுவினர் பங்கு இறை மக்கள்  சிறப்பாக செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad