தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராமஜெயம் வேட்பு மனு தாக்கல் செய்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஏப்ரல், 2026

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராமஜெயம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராமஜெயம் வேட்பு மனு தாக்கல் செய்தார் 

ஏப். 04, தமிழகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஒட்டப்பிடாராம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ராமஜெயம் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதைத் தொடந்து வரும் ஏப்ரல் 6ம் தேதியுடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நிறைவுப்பெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ராமஜெயம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் ராமஜெயம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் ராமஜெயம் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோருடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் கழக நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad