வேலூர் மாவட்டம் குடியாத்தம் . அருகே. ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உள்பட .7 பெண்கள் காயம் !
குடியாத்தம் ,ஏப்ரல் 14-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் . அடுத்த செம்பேடு ஊராட்சி . பங்கரிஷி குப்பம் . சுற்று வட்டார பகுதியில் உள்ள பெண்கள் தனியார் காலனி தொழிற்சாலைக்கு
கவி குமார் ஆட்டோ ஓட்டுநர் வயது 27. என்பவரின் ஆட்டோவில் வேலைக்கு செல்வது வழக்கம் இன்று காலை அப் பகுதியை சேர்ந்த ரேணுகா வயது 33. அனிதா வயது 37. சத்தியவேணி. வயது 40 எஸ்தர் வயது 27 சுஜாதா வயது 45 கனகா . வயது 36 தீபிகா வயது 27
ஆகியோர் ஆட்டோவில் காலனி தொழிற் சாலைக்கு வேலைக்கு சென்று உள்ளனர் அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை . இழந்து ஆட்டோ சாலையில். தலைகீழாக கவிழ்ந்தது இதனால் ஆட்டோவில் பயணம் செய்த ஏழு பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர் தகவல் . அறிந்தவுடன் குடியாத்தம் அதிமுக நகர கழக செயலா ளர் ஜே கே என் பழனி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஆகியோர் மருத்துவமனைக்கு. நேரில் சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள் இது சம்பந்தமாக கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப் பட்டது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக