கன்னியாகுமரியில் நடைப்பயிற்சி சென்றவர்களிடம் செயின் பறித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகளை பெங்களூரில் வைத்து கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஏப்ரல், 2026

கன்னியாகுமரியில் நடைப்பயிற்சி சென்றவர்களிடம் செயின் பறித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகளை பெங்களூரில் வைத்து கைது.

கன்னியாகுமரியில் நடைப்பயிற்சி சென்றவர்களிடம் செயின் பறித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகளை பெங்களூரில் வைத்து கைது 

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் நெடுஞ்சாலையில் நடைப்பயிற்சியை சென்று கொண்டிருந்த மகாதானபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி மங்கலம்(56) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி ராஜலட்சுமி(62) ஆகியோரிடம் 9.5 பவுன் திருட்டு போயிருந்தது. 

இது குறித்த புகார் சம்பந்தமாக கன்னியாகுமரி காவல் நிலைய குற்ற எண் 82/2026 U/S 304 BNS பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் உத்தரவின்படி கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரராஜ பெருமாள் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் 

அதிகமான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான விசாரணை செய்யப்பட்டது. 

இந்நிலையில் இக்குற்றத்தில் ஈடுபட்ட
கிருஷ்ணகிரி ஓசூர் பகுதியை சேர்ந்த வேலு குட்டி என்பவரின் மகன் ராதாகிருஷ்ணன் (51)
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் அருண்குமார் (38)
ஓசூர் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் எஸ்வந்த் குமார்(23) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

விசாரணையில் மேற்படி குற்றவாளிகள் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள் என்பதும் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருட்டுப் போன முழு நகைகளும் திருடுவதற்கு பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர வாகனமும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

சிறப்பாக பணியாற்றி குற்றவாளி கைது செய்து நகைகளை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad