தென்திருப்பேரை ஏப்ரல் 1 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஏழாவது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன் கோவிலில் பங்குனி உற்சவம் கொடியேற்றம் நடந்தது.
அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூபம். 5.30 மணிக்கு நித்தியல் 6.15 மணிக்கு கொடிப் பட்டம் மாடவீதி சுற்றி வந்தது. 6.45 மணிக்கு உற்சவர் நிகரில்லை முகில் வண்ணன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மணவாள மாமுனி சன்னதி அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.
கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கொடிமரம் பாலாயம் செய்து உள்ளதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் கொடி மர பூஜை நடந்தது. 7.45 மணிக்கு அர்ச்சகர் திருவேங்கடத்தான் கொடி ஏற்றினார்.
தினசரி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை பின்னர் 7.30 மணிக்கு பரங்கி நாற்காலி சிங்கம். அனுமார் சேஸ வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.
ஏப்ரல் 5 ந்தேதி கருடசேவை ஏப்ரல் 9 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராகுல். நிர்வாக அதிகாரி அஜித் ஆய்வாளர் நம்பி
அறங்காவலர் நல்ல குழுத் தலைவர் மகரபூஷணம், உறுப்பினர்கள் மாரிதுரைசாமி கணேசன் பாக்கியராஜ் வளர்மதி கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா தல வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக