திருப்பூரில் முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி வேட்பாளர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஏப்ரல், 2026

திருப்பூரில் முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி வேட்பாளர்


வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூர் வடக்கு தொகுதி சார்பாக அபிநயா அவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார் அந்த வகையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் மாநகராட்சியில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை முதல் சென்று தாக்கல் செய்தார் உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாநில ஒருங்கிணைப்பாளர் பழ .சிவகுமார் மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர்  இளந்தமிழன் சேக் மண்டல செயலாளர் செந்தமிழ் செல்வராஜ் மாநில பாசறை பொறுப்பாளர் பிரேம்குமார் மற்றும் கார்த்திக் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நிர்வாகிகள் பாசறை பொறுப்பாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக வேட்பாளர் அபிநயா பெருமாநல்லூர் கொண்டத்து அம்மன் கோவிலுக்கு பூவோடு எடுக்க வேண்டுதல் செய்து இருந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய வாகனத்தில் வந்து இறங்கி வெயில் தாக்கம் தாங்க முடியாமல் வெறும் காலில் தரையில் நடக்க முடியவில்லை அலுவலகத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்

வேட்பாளர் அபிநயா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு அளவில் எத்தனை பெருங் கட் சிகள் இருந்தாலும் முதல் முறையாக 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி தான் அதே போல் தமிழ்நாடு முழுவதும் முதன் முதலாக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததும் நாம் தமிழர் கட்சி தான் இதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தில் முதல் முதலாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் நாம் தமிழர் கட்சி 

செயல்பாட்டு வரைவு புத்தகம் கொடுத்துள்ளோம் அவிநாசி அத்திக்கடவு செயல்பாடு பற்றியும் செயல்பாட்டு  வரைவில் உள்ளது நிலத்தின் கீழ் வளமாக இருந்தால் 

நிலத்தின் மேல் வளமாக இருக்கும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் 1075 குளங்கள் இணைந்துள்ளதாக கூறுகின்றனர் அத்தனை குளங்களும் தூர்வாரி உள்ளதா மேலும் 

தொரவலூர் குளங்களில் கழிவு நீர் கலக்கிறது முதல் முறையாக இந்த நீரை கொண்டு பொதுமக்கள் நெல்லை விளைவித்து உள்ளனர் என்ற செய்தி வருகிறது விஷமான இந்த நீரை கொண்டு விளைவிக்கும் நெல் கெடுதலை தரும் செயல் என்பது மக்களுக்கும் மண்ணுக்கும் பயன்பாட்டாக இருக்க வேண்டும் தேர்தலுக்காக அரசியல் லாபத்திற்காக இருக்க கூடாது இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் நாம் தமிழர் கட்சியில் இலவசங்கள் கொடுப்பது இல்லை இலவசமாக கொடுப்பது 

நீர்  மேலும் கல்வி மருத்துவம் இலவசமாக கண்டிப்பாக கொடுப்போம் வேறு எந்த ஒரு பொருளும் இலவசம் இல்லை திருப்பூரை பொறுத்தவரை குப்பை பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது குப்பை பிரச்சனைக்கு உண்டான தீர்வு காண திட்டங்களை வைத்திருக்கிறோம் கொடுத்திருக்கிறோம் கேஸ் பிரச்சனை தட்டுப்பாடு கடந்த 2016 இல் நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் ஒவ்வொரு வார்டுகளிலும் பயோ கேஸ் திட்டம் அமைப்போம் என்று சொன்னோம் மக்களிடம் நாம்  வேண்டுகோளாக வைப்பது பொதுமக்களுக்கு பணம் இலவசமாக கொடுக்க மாட்டோம் வெற்று வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்ற மாட்டோம் உண்மையும் நேர்மையுமாக தேர்தல் களத்தில் நின்று மக்களுக்கு பாடுபடுவேன் என்று கூறுகிறேன் நான் உங்களிடம் ஓட்டு கேட்கவில்லை நம்பிக்கையை கேட்கிறேன் எங்களை நம்பி அதிகார வலிமையை தாருங்கள்  என்றும் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்றும் உறுதியுடன் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா கூறினார மாவட்ட செய்தியாளர் 

அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad