வேலூர் குடியாத்தத்தில் அனைத்திந்திய அண்ணா திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 ஏப்ரல், 2026

வேலூர் குடியாத்தத்தில் அனைத்திந்திய அண்ணா திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு !

வேலூர் குடியாத்தத்தில் அனைத்திந்திய அண்ணா திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு ! 
குடியாத்தம் ,ஏப்ரல் -1
             வேலூர்  மாவட்டம் குடியாத்தம் சட்ட மன்றத் தொகுதி நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி அனை த்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தின் வெற்றி வேட்பாளர்  ஜி பரிதா புருஷோத்தமன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளின் சார்பில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர் களின் தலைமையில் இன்று (1.4.26) புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் குடியாத்தம் கொச அண்ணாமலை தெரு சிவசிவ கோயில் அருகில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக தேர்தல் பொறுப்பாளர் காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர்  சதீஷ் சங்கர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர்  ஜி பரிதா புருஷோத்தமன் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி ஆகியோர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபிநாத், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலா ளர் ஜி கே ரவி, நகர செயலாளர் குமார், பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் ஜெகன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.அருணோதயம், நகர தலைவர் ஜெ.தினகரன், புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகரச் செயலாளர் சங்கர், புரட்சி பாரதம் நகர செயலாளர் கங்காதரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் குணசீலன், இந்திய ஜனநாயக கட்சி பாபாஜி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ்வாடி மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் குமார் மற்றும் கழக நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வா கிகளும் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad