வீடு கட்ட இலவசமாக கிரஷர் குவாரி நிறுவனத்திடம் 110 டன் மண் கேட்டு மிரட்டிய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஏப்ரல், 2026

வீடு கட்ட இலவசமாக கிரஷர் குவாரி நிறுவனத்திடம் 110 டன் மண் கேட்டு மிரட்டிய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்.

வீடு கட்ட இலவசமாக கிரஷர் குவாரி நிறுவனத்திடம் 110 டன் மண் கேட்டு மிரட்டிய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்த கிரஷர் குவாரி உரிமையாளர் ! 

விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி !

நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் சீவலப்பேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பாலாமடை கிராமத்தில் சுந்தரராஜன் ப்ளு மெட்டல் என்ற பெயரில் எம்.சான்ட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

கடந்த வெள்ளிக்கிழமை தாழையூத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராமநாதன் மற்றும் காவலர் பாலசுப்ரமணியன் இருவரும் எம் சாண்ட் நிறுவனத்திற்கு வந்து வீடு கட்டுவதற்கு இலவசமாக மண் வேண்டும் என கேட்டுள்ளனர். 

ஆனால் கிரஷர் மண்ணெல்லாம் கேரள மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன் என உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

நாங்கள் தாழையூத்து காவல் நிலையத்தில் பணிபுரிகிறோம் எனவே எங்களுக்கு கிரசர்மன் வேண்டுமென மிரட்டும் தொனியில் கேட்டுள்ளனர். அதற்கு கிரசர் கோரி நிறுவனத்தாரும் 10 டன் மண் தருவதாக கூறியுள்ளார். 

ஆனால் மறுநாள் சனிக்கிழமை 3 டாரஸ் லாரிகளில் 110 டன் மண் நிரப்பி தர வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் மிரட்டும் துணியில் கேட்டுள்ளதாக கூறுகின்றனர். தர மறுத்ததற்கு தொலைபேசி வாயிலாக மண்ணை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். 

மேலும் அவதூறான வார்த்தைகளால் மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளனர். மேலும் கிரஷருக்கு வரக்கூடிய லாரிகளை மறித்து அவரிடம் இருக்கக்கூடிய உரிமச் சீட்டுகளை பறித்து அபராதமும் விதித்துள்ளனர். 

ஒரு லாரிக்கு 2000 முதல் 5000 வரை லஞ்சமாக பணமும் மிரட்டி பெற்றுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர், தென் மண்டல ஐஜி, மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மனு அளித்திருப்பதாக கூறிய குவாரி உரிமையாளரான சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் - எங்கள் குவாரியில் இலவசமாக 110 டன் மண் கேட்டு மிரட்டிய தாழையூத்து காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராமநாதன் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியம் மீது உரிய விசாரணை நடத்தி சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் மனு அளித்து கோரிக்கை விடுத்திருக்கிறோம் என தெரிவித்தார். 

மேலும் உதவி காவல் ஆய்வாளர் ராமநாதன், வீடு கட்டுவதற்காக இலவசமாக மண் கேட்டு மிரட்டிய செல்போன் ஆடியோ அனைத்தையும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளோம். இத்தனை வருடமாக குவாரி நடத்தி வரும் நிலையில் இதுவரை எந்த காவலர்களும் இதுபோன்று கேட்கவில்லை. 

எனவே இவர்கள் போன்ற கருப்பாடுகள், காவல் துறையில் இருந்து களையப்பட வேண்டும். நீக்கப்பட வேண்டியவர்கள் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

மண் திருடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டிய காவலர்களே; குவாரி உரிமையாளரிடம் இலவசமாக வீடு கட்ட மண்ணைக் கேட்டு மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் மாடசாமி திருநெல்வேலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad