ஏப்.01- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சாத்தர்கோன் விளையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3பேர் கொண்ட கும்பல் வேல்முருகனை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலசேகரப்பட்டணம் காவல் நிலையப் போலீசார், வேலமுருகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சாத்தரகோனவிளை சிவன் மகன் கோவிந்தன் (22) மற்றும் 2 சிறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் உடன்குடி பஜார் சாலையில் நடந்த கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக