பொதுமக்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பேரிகார்டர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

பொதுமக்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பேரிகார்டர்.

பொதுமக்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பேரிகார்டர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் முன்பு சில நாட்களாக வைக்கப்பட்டுள்ள பேரிகார்டரால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

குறிப்பாக அந்தப் பகுதி அரசு பேருந்துகள் திரும்பும் இடமாகவும் அருகில் பெட்ரோல் பங்க் இருப்பதாலும் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இதே சாலையை பயன்படுத்துகின்றன. இவ்வாறு பரபரப்பான பிரதான சாலையை பாதியை மறைக்கும் வகையில் இந்த பேரிகார்டர் வைக்கப்பட்டிருப்பதால் வாகனங்கள் ஒருவழிப் பாதையைப் போல செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் முதியோர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விபத்துகள் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பேரிகார்டரை அகற்ற வேண்டும் என்பது பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad