பெருங்குளம் மாயக்கூத்தர் கோவிலில் கொடியேற்றம்.
ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 12 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஆறாவது ஆன திருக்குடந்தை (எ) பெருங்குளம் மாயக்கூத்தர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவிழா துவங்கும். காலை 5.30 மணிக்கு விஸ்வரூபம். 7.10 மணிக்கு நித்தியல். 9.05 மணிக்கு உற்சவர் மாயக்கூத்தர் குளந்தை வல்லி அலமேலு மங்கை தாயார்கள் உடன் கருட மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
9.25 மணிக்கு கொடிப் பட்டம் சுற்றி வந்தது. கொடி பூஜை முடிந்து 9.52. மணிக்கு ஸர்வ சாதகம் பெரிய பட்டர் கோவிந்தன் கொடியேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் பாலாஜி ஸ்தலத்தார்கள் சீனிவாசன். ராமானுஜம்.ஸ்ரீதர் . நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழுத் தலைவர் அஸ்வின். உறுப்பினர்கள் நாகப்பன்.
உலகம்மாள். சுப்பிரமணியன். பொன் சுந்தர். கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினசரி காலை தங்க தோளுக்கினியானில் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு பரங்கி நாற்காலி. சிங்கம் அனுமார் சேஷ வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். ஏப்ரல் 16 ந்தேதி கருடசேவை நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக