குழந்தை கடத்த முயற்சி செய்ததாக ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு- போலீசார் விசாரணை !
குடியாத்தம் ,ஏப்ரல் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது ஒன்றரை வயது பெண் குழந்தை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்
அதே வார்டில் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த நியாஸ்(வயது 35) என்பவரும் உடல்நிலை குறைவு காரணமாகஅனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யில்இன்று காலை நியாஸ் குழந்தையை எடுத்துக் கொண்டு செல்வதாக அக்கம் பக்கத்தினர் கூறவே அங்கிருந்த பொது மக்கள் அவரை குழந்தை கடத்த வந்த தாக நினைத்து அவரை பிடித்து குடியாத் தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர் இதனையடுத்து போலீசார் மேற் கொண்ட விசாரணையில் நியாஸ் வலிப்பு நோய் காரணமாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அருகே இருந்த ஒன்ற ரை வயது குழந்தையை நியாஸ் தூக்கி கொஞ்சியதாகவும் இதை அருகில் இருந்தவர்கள் குழந்தை கடத்த வந்ததாக தவறாக நினைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது மேலும் ஒன்றரை வயது குழந்தையின் தந்தை ரமேஷும் புகார் எதுவும் காவல் நிலையத்தில் அளிக்கப் படாத நிலையில் மேலும் இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்திய தாக பரவிய தகவலால் குடியாத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக