ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 29. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் இரண்டாம் திவ்ய தேசமான நத்தம் விஜயாசனப் பெருமாள் கோவிலில் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றது.
கடந்த ஏப்ரல் 25 ந்தேதி முதல் ஹோமகுண்ட பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 7 மணி முதல் 8 வரை ஹோமம் 8.15 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. 8.45 மணிக்கு தீர்த்த குடங்கள் பிரகாரம் சுற்றி விமானம். மூலவர். உற்சவர். விஸ்வக்சேனர்.ஆழ்வாராதிகள். நரசிம்மர். சன்னதி கருடன் இருப்பிடங்கள் சென்றன.
9.40 மணிக்கு கும்பாபிஷம் சர்வசாதகம் கோவிந்தன் பட்டாச்சாரியார் . ரமேஷ் பட்டர். பாலாஜி பட்டர் தல அர்ச்சகர்கள் கண்ணன் பட்டர் ராஜகோபாலன் ஆகியோர் நடத்தினர். பின்னர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவித்தனர்.
சாத்துமுறை முடிந்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன் தேவராஜன் சீனிவாசன். ராமன். கண்ணன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணன்.
அறநிலைய துறை இணை ஆணையர் ரோசாலி சுமிதா நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன்.ஆய்வாளர் நிஷாந்தினி அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம்.
பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். எழுத்தர் இசக்கிபாண்டி நிர்வாகம் பரகாலசிங்கன். ஓய்வூ உதவி ஆணையாளர் ராமசாமி பொறியாளர் பிரகாஷ். கார்த்திக் பொதுப் பணித் துறை நீர்ப்பாசன தலைவர் உதயசூரியன்
முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்த சிவசுப்பு. உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்ன தானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை வேணுகோபால சுவாமி கைங்கரியம் டிரஸ்ட் . ஸ்ரீ வரகுண மங்கை சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் ஸ்தலங்கள் செய்திருந்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக