தூத்துக்குடி - குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிக் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மண் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி, டிப்பர் லாரி பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அடுத்த வர்த்தகரெட்டிப்பட்டி பகுதி குளத்தில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளி கடத்துவதாகக் கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் எவ்வித அனுமதியுமின்றி மண் அள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
போலீசாரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார், சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பொக்லைன் இயந்திர ஆப்பரேட்டர் ராமசாமி (33), லாரி ஓட்டுநர் வெள்ளைச்சாமி (45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு பொக்லைன் இயந்திரம், ஒரு டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக