நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தைக்கு, அதன் நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஏப்ரல், 2026

நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தைக்கு, அதன் நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தைக்கு, அதன் நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை, கடந்த 2022 ஜூலை 7 முதல் தொடங்கப்பட்டு, சுற்று வட்டார பொதுமக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கி வருகிறது. 

சலுகை கட்டணத்தில் மருத்துவம் அளிக்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இங்கு மகப்பேறு சிகிச்சைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு  வருகிறது.  இந்நிலையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி - ரம்யா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது. 

மருத்துவமனையில் இந்த குழந்தை,  பிறந்த 500-வது குழந்தை என்பதால், அதனைக் கொண்டாடும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மோகன் சி லாசரஸ், குழந்தைக்குத் தங்க மோதிரம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். 

இந்நிகழ்வில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad