வேலூர் மாவட்டம் குடியாத்தில் கருப் பளீஸ்வரர் ஆலய சித்திரை தேர்திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஏப்ரல், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தில் கருப் பளீஸ்வரர் ஆலய சித்திரை தேர்திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தில் கருப் பளீஸ்வரர் ஆலய சித்திரை தேர்திருவிழா
குடியாத்தம் ,ஏப்ரல் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழமை வாய்ந்த கருப்புலீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்
வேலூர் மாவட்டம்  குடியாத்தம்  நெல்லூர் பேட்டை  பகுதியில் உள்ள பழமையான புகழ்பெற்ற கருப்புலீஸ்வரர் கோவிலில் சித்திரை   தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்  இந்நிலையில்  இன்று சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடை பெற்றது முன்னதாக அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெல்லூர்பேட்டை மாட வீதிகள் வழியாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது 
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் 
எஸ் செளவுந்தர்ராஐன் கே.எம்.ஜி. ராஜேந்திரன். ஜே கே என் பழனி கே.எம். பூபதி எம் எஸ் அமர்நாத் அர்ச்சனா நவீன். பூங்கொடி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர் மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் குடியாத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர் கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad