குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் சம்பந்தமாக மண்டல அலுவலர்களுக் கான ஆலோசனை கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் சம்பந்தமாக மண்டல அலுவலர்களுக் கான ஆலோசனை கூட்டம் !

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் சம்பந்தமாக மண்டல  அலுவலர்களுக் கான ஆலோசனை கூட்டம் !
குடியாத்தம் ,ஏப்ரல் 3 -
         வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் நகரம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று 03.04.2026 காலை 11.00 மணி முதல் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ் நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 046-குடியாத்தம் (தனி) சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் செய்ய வேண்டிய முன் னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு கள் பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அவர்களின்தலைமையில் அனைத்து மண்டல காவல் அலுவலர்களு டன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்/குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் துணை காவல் கண்காணிப் பாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கள்/ குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர்கள்,  குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல காவல் அலுவலர்கள்குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு நகர மற்றும் கிராமிய காவல் ஆய்வாளர்கள் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad